Tuesday, March 10, 2015

கற்பக மிளகு

வேலி பருத்தி + கருப்பு மிளகு = கற்பக மிளகு

   ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இந்த கற்பக மிளகு மிகவும் பயனுள்ள எளிய மருந்து. இந்த கற்பக மிளகினை  தினமும் உட்கொண்ட பிறகு நாளைடைவில் அதன் பலனை அறிய முடியும்.

        நாம் வயல் வெளியிலோ ஆற்றோரத்திலோ  கண்டிப்பாக வேலி பருத்தியை பார்த்திருபோம். பெயருக்கேற்ப இந்த மூலிகை வேலியில் படர்ந்தும்  காணப்படும். இந்த மூலிகை கொடி வகையை சார்ந்தது. இதனை ஒடித்தால் பால் வரும். இதன் இலையின்  காம்பு  இளஞ்சிவப்பு நிறமும் பச்சை நிறமும் கலந்தார் போல் காணப்படும்.

Picture of Pergularia daemia


இந்த வேலி பருதியின் இலைகளை பறித்து சுத்தம் செய்து நன்கு அரைத்து ஒரு கிண்ணதில் கெட்டியான சார் எடுத்து ,அந்த சாற்றில் கருப்பு மிளகினை போட்டு நன்கு ஊற  வைக்க வேண்டும். தினமும் காலையில் வெய்யிலில் வைத்து மாலை எடுத்து வீட்டினுள் வைக்கவும். கிண்ணத்தில் தூசு விழாமல் இருக்க  மெல்லிய வலையோ துணியோ கொண்டு மூடி வைக்கலாம்.இப்படி ஏழு நாட்கள் இந்த  சாற்றினை வெயிலில்  வைத்து காய வைக்க வேண்டும். இந்த ஏழு நாட்களில் சாறு வற்றி மிளகு மட்டுமே காணப்படும். இந்த மிளகையே கற்பக மிளகு என்று சித்தர் நூட்கலில் குறிப்பிடுகிரர்கள்.  இந்த மிளகினை தினமும் ஒன்றோ இரண்டோ உட்கொண்டு  வந்தால் ஆஸ்துமா படிபடியாக மட்டுப்படும் என்பது திண்ணம்.

  ஆஸ்துமாவினால் மிகவும் பாதிக்க பட்டவர்கள் கூட இந்த எளிய மருந்தினை நம்பிக்கையோடு உட்கொண்டு வந்தால்  கண்டிப்பாக குளிர் காலத்தில் ஆஸ்துமாவின் கடும் பாதிப்பினில் இருந்து தப்பித்து விட முடியும். இது அனுபவத்தில் கண்டது.

No comments:

Post a Comment