Tuesday, March 10, 2015

கற்பக மிளகு

வேலி பருத்தி + கருப்பு மிளகு = கற்பக மிளகு

   ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இந்த கற்பக மிளகு மிகவும் பயனுள்ள எளிய மருந்து. இந்த கற்பக மிளகினை  தினமும் உட்கொண்ட பிறகு நாளைடைவில் அதன் பலனை அறிய முடியும்.

        நாம் வயல் வெளியிலோ ஆற்றோரத்திலோ  கண்டிப்பாக வேலி பருத்தியை பார்த்திருபோம். பெயருக்கேற்ப இந்த மூலிகை வேலியில் படர்ந்தும்  காணப்படும். இந்த மூலிகை கொடி வகையை சார்ந்தது. இதனை ஒடித்தால் பால் வரும். இதன் இலையின்  காம்பு  இளஞ்சிவப்பு நிறமும் பச்சை நிறமும் கலந்தார் போல் காணப்படும்.

Picture of Pergularia daemia


இந்த வேலி பருதியின் இலைகளை பறித்து சுத்தம் செய்து நன்கு அரைத்து ஒரு கிண்ணதில் கெட்டியான சார் எடுத்து ,அந்த சாற்றில் கருப்பு மிளகினை போட்டு நன்கு ஊற  வைக்க வேண்டும். தினமும் காலையில் வெய்யிலில் வைத்து மாலை எடுத்து வீட்டினுள் வைக்கவும். கிண்ணத்தில் தூசு விழாமல் இருக்க  மெல்லிய வலையோ துணியோ கொண்டு மூடி வைக்கலாம்.இப்படி ஏழு நாட்கள் இந்த  சாற்றினை வெயிலில்  வைத்து காய வைக்க வேண்டும். இந்த ஏழு நாட்களில் சாறு வற்றி மிளகு மட்டுமே காணப்படும். இந்த மிளகையே கற்பக மிளகு என்று சித்தர் நூட்கலில் குறிப்பிடுகிரர்கள்.  இந்த மிளகினை தினமும் ஒன்றோ இரண்டோ உட்கொண்டு  வந்தால் ஆஸ்துமா படிபடியாக மட்டுப்படும் என்பது திண்ணம்.

  ஆஸ்துமாவினால் மிகவும் பாதிக்க பட்டவர்கள் கூட இந்த எளிய மருந்தினை நம்பிக்கையோடு உட்கொண்டு வந்தால்  கண்டிப்பாக குளிர் காலத்தில் ஆஸ்துமாவின் கடும் பாதிப்பினில் இருந்து தப்பித்து விட முடியும். இது அனுபவத்தில் கண்டது.

Thursday, March 5, 2015

திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து

திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து

இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் முக்கியம். அதைப்போல் நமது பிரச்சனைகளை சரியாகத் தீர்க்கும் விதமாக எதையும் கையாள வேண்டியுள்ளது. இதற்கு உடலும் உள்ளமும் முழுத் தகுதியுடன் இருந்தால் தான் இவை சாத்தியமாகும். உடலும் உள்ளமும் முழுத்தகுதியுடன் விளங்குவதற்கு, அன்றாட வேலைகளை ஒரு ஒழுங்கு முறையுடன் செய்து வர வேண்டும். முறையான மற்றும் கட்டுப்பாடான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையை உடலளவில் மிகவும் வசதியான முறையில் வாழ்கிறோம். ஆனால், மனதளவில் மிகவும் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை தான் வாழ்கிறோம். இத்தகைய வாழ்க்கை முறை சீக்கிரமாகவே முதுமையாக உணர வைத்து விடும் அல்லது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

Wednesday, March 4, 2015

இளநீர் சாகுபடி

இனிப்பான வருமானம் கொடுக்கும் இளநீர்

தேர்வு செய்த நிலத்தில் 22 அடி இடைவெளியில் 3 அடி நீள, அகல, ஆழத்தில் 'ஜிக் ஜாக்முறையில் குழியெடுக்க வேண்டும். ஏக்கருக்கு 83 குழிகள் வரை எடுக்கலாம். குழிகள் எடுத்து, மூன்று மாதங்கள் வரை நன்றாக ஆறப்போட வேண்டும். பிறகு, குழிகளில் பாதி அளவு மண் நிரப்பி, கால் பங்குக்கு சலித்த மணல் அல்லது கிணற்று மண் இதில் ஏதாவது ஒன்றைக் கொட்டி சமன் செய்து... ஒவ்வொரு குழிக்கும் தலா 200 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை இட்டு கன்றுகளை நடவு செய்து, மீதமுள்ள மேல் மண்ணைக் கொண்டு மூட வேண்டும். கன்றுகளை பீஜாமிர்தக் கரைசலில் முக்கி எடுத்து விதைநேர்த்தி செய்த பிறகே நடவு செய்ய வேண்டும்.

Tuesday, March 3, 2015

நெல்லிக்காய் சாகுபடி

ஆண்டுக்கு ஒரு லட்சம்

நிலத்தை நன்றாக உழவு செய்து, செடி நடுவதற்கு தகுந்த இடைவெளி விட்டு 2.5 ஜ் 2.5 ஜ் 2.5 அடி நீள, அகல மற்றும் ஆழத்தில் குழி எடுத்து, ஒரு மாதத்துக்கு அதை ஆறப்போட வேண்டும். செடிக்குச் செடி 20 அடி இடைவெளி தேவை (ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இடைவெளி விடுகிறார்கள்). ஏக்கருக்கு 100 செடிகள் வரும். நடவு செய்யும்போதே தண்ணீர் விட்டால் குழியின் அடிபாகத்தில் சூடு ஏறி, இளம் வேர் கருகிவிடும். எனவே, நடவுக்கு இரண்டு நாள் முன்பாகவே குழிகளில் தண்ணீர் ஊற்றி நன்றாக குளிர வைக்கவேண்டும். பிறகு செடிகளை நடவு செய்யலாம். காலை எட்டு மணிக்குள் ளாகவோ... அல்லது மாலை மூன்று மணிக்கு பிறகோ நடலாம். வெயில் நேரத்தில் நடக்கூடாது.